இளையராஜாவுக்காக பிரபல நாளிதழை காரி துப்பிய நடிகை கஸ்தூரி! [வீடியோ]

இளையராஜாவின் சாதியை தலைப்பில் போட்ட பிரபல ஆங்கில நாளிதழை காரித் துப்பி கிழித்தெறிந்துள்ளார் நடிகை கஸ்தூரி.

குடியரசுத் தினத்தை ஒட்டி இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டதை செய்தியாக வெளியிட்ட பிரபல ஆங்கில நாளிதழான ‘நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ அந்த தலைப்பில் அவரின் சாதியை குறிப்பிட்டுள்ளது. இதனைக் கண்ட இசைஞானியின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி இசைஞானி இளையராஜாவின் சாதியை குறிப்பிட்டிருந்த பிரபல நாளிதழை காரித் துப்பி கிழித்துப் போட்ட வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், “இளையராஜா தேசிய பொக்கிஷம். கடவுளுக்கு சாதி கிடையாது. இசைக்கு எல்லைகள் எதுவும் தெரியாது” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

 

வீடியோ இங்கே:

More News >>