திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பட்டியல் - இன்று மாலை வெளியாகிறது
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பட்டியலை இன்று மாலை மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார். 40 தொகுதிகளுக்குமான ஒட்டு மொத்த பட்டியல் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி யுள்ளது.
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்ற பங்கீடு முடிவடைந்தாலும் தொகுதி ஒதுக்கீட்டில் காங்கிரசுடன் இழுபறி நீடித்து வருகிறது.
பிற கூட்டணிக் கட்சிகளான இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. காங்கிரஸ் தரப்பில் மட்டும் பிடிவாதம் பிடிப்பதால் ஓரிரு தொகுதிகளை முடிவு செய்வதில் இழுபறி நீடிப்பதாக தகவல் .
இன்று மாலை 4 மணிக்கு காங்கிரஸ் குழுவினருடன் திமுக தலைவர் ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்துகிறார். இதன் 40 தொகுதிகளுக்குமான இறுதிப் பட்டியல் இன்று மாலையே அறிவிக்கப்படுகிறது.