அதிமுகவுடன் தமாகா கூட்டணியா ..?ஓரிரு நாளில் நல்ல அறிவிப்பு வரும் என்கிறார் வாசன்
அதிமுக கூட்டணியில் சேருவது குறித்து ஓரிரு நாளில் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மகா கூட்டணியை கிட்டத்தட்ட இறுதி செய்து விட்டன. இரு கூட்டணியிலும் சேராத கமல், சீமான், சரத்குமார் மற்றும் பிற சிறிய கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டன.
ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைமை தான் இன்னும் அந்தரத்தில் உள்ளது. முதலில் திமுக கூட்டணிக்கு தூது விட்டார் ஜி.கே.வாசன் .ஆனால் காங்கிரஸ் தரப்போ ஜி.கே.வாசனை சேர்க்க வே சேர்க்கக் கூடாது என்று நெருக்கடி கொடுத்து விட்டது.
அதிமுக கூட்டணியில் இணைய தமாகா தரப்பில் பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நீடிக்கிறது. அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா? வராதா? என்ற இழுபறி இருந்த போது 2 தொகுதிகள் வரை தமாகாவுக்கு ஒதுக்க அதிமுக முன்வந்தது. தற்போது ஒரே ஒரு தொகுதி மட்டும் தான் என கூறப்படுவதால் இழுபறி நீடிக்கிறது.
இன்று தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சென்னையில் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், கூட்டணி குறித்த தமாகா நிலைப்பாடு குறித்து அதிமுகவிடம் தெரிவித்துள்ளோம். ஓரிரு நாளில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றார் வாசன்.