விஜய் பட ஷூட்டிங்கில் எத்தனை நாள் கலந்து கொள்கிறார் நயன்தாரா
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக உருவாகிவரும் படம் விஜய் 63. தற்பொழுது இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்திருக்கிறார் நடிகை நயன்தாரா.
சமீப காலமாக விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விடுமுறையை கொண்டாடி வந்த நயன்தாரா, நேரடியாக விஜய் படத்தின் ஷூட்டிங்கில் தற்பொழுது இணைந்துள்ளார். விஜய்யுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் நயன்தாரா. ஒட்டுமொத்த படத்தின் படப்பிடிப்பையும் 180 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்கிற பரபரப்பில் பணியாற்றி வருகிறார்கள் அட்லி & டீம். ஜனவரியில் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையின் பிரபலமான கல்லூரி ஒன்றில் நடந்துவருகிறது. சத்தமே இல்லாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் நயன்தாரா. நயனின் காட்சிகள் பெரும்பாலும் சென்னையிலேயே படமாக்க திட்டமிட்டிருக்கிறது படக்க்குழு. இன்னும் இரண்டு வாரத்திற்கு அந்த கல்லூரியிலேயே படப்பிடிப்பும் நடக்க இருக்கிறதாம்.
பாடலாசிரியர் விவேக் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார். படத்தில் யோகி பாபு முக்கிய ரோலில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ்.நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. விஜய் பிறந்த நாளான ஜூன் 22ல் பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்க்கலாம்...
லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தற்பொழுது ஐரா, சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், கொலையுதிர் காலம் உள்ளிட்ட படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.