`இந்திய அணியின் பாதி கேப்டன் தோனி தான் - பிசிசிஐயை விளாசிய பிஷன்சிங் பேடி
ஆஸ்திரேலியாவுக்கு எதிராஇரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் தொடர் 2-2 என்று சமநிலையில் உள்ளது. இந்தப் போட்டிகளில் மிகப்பெரிய ஸ்கோர் எடுத்திருந்தும் தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய அணி மீது கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்தியாவின் தோல்விக்கு ரிஷாப் தவறவிட்ட ஸ்டம்பிங்கே காரணம் என்றும், தோனியை பரிசோதனை முயற்சிக்காக உட்கார வைத்தது தவறு என ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிசிசிஐ நடவடிக்கைக்கு முன்னாள் வீரர் பிஷன்சிங் பேடி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், ``தோனியின் தேவை அணியில் அவசியம் என்பது மொகாலி போட்டியில் தெளிவாக தெரிந்தது. அவர்தான் அணியில் பாதி கேப்டனாக செயல்படுகிறார். விராட் கோலியின் செயல்பாடுகள் தோனி இல்லாமல் தொய்வை சந்திக்கிறது. தோனியை ஏன் புகழ்கிறார்கள் என்பது இப்போது புரிந்திருக்கும். அவர்தான் இந்திய அணியின் பாதி கேப்டன். இதில் எந்த மாற்றுக்கருதும் இல்லை.
தோனி இளம்வீரர் அல்ல. தோனி உத்திகளை வகுப்பவர். அவரது தேவை அணிக்கு கட்டாயம். உலகக் கோப்பைக்கு முன்னர் இந்திய அணி தேவையில்லாத பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்கிறது. மேலும் குல்தீப் மற்றும் சாஹல் இந்தியாவின் பிரதான ஸ்பின்னர்களாக உள்ளனர். அதேநேரம் அஷ்வின், ஜடேஜாவின் ஒருநாள் போட்டிகளுக்கான நிலையை தெளிவு படுத்தவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.