நாம் தமிழர் கட்சியின் மெழுகுவர்த்தி சின்னமும் பறிப்பு - பம்பரம், மாம்பழத்துக்கும் ஆபத்து
சீமானின் நாம் தமிழர் கட்சியின் சின்னமான மெழுகுவர்த்தியையும் பறித்து மேகாலயாவில் உள்ள ஒரு கட்சிக்கு அந்தச் சின்னத்தை வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம் .
மக்களவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள சின்னஞ் சிறு கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி வருகிறது தலைமை தேர்தல் ஆணையம் .சில நாட்களுக்கு முன்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிடமிருந்து மோதிரம் சின்னம் பறிக்கப்பட்டு தமிழ்நாடு இளைஞர் கட்சி என்ற ஒரு குட்டிக் கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம் .
இன்று வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில் நடிகர் சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஒதுக்கியிருந்த மெழுகுவர்த்தி சின்னமும் பறிக்கப் பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் உள்ள பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் ப்ரண்ட் என்ற மாநிலக் கட்சிக்கு மெழுகுவர்த்தியை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம் .
அடுத்து மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இழந்ததாக கூறப்படும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், பாமகவுக்கு மாம்பழம் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படுமா? பறிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.