ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா..? டெல்லியில் நாளை பரபரப்பான பைனல்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் நாளை நடைபெறுகிறது. கடைசி இரு போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா கடைசிப் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற இக்கட்டான சூழலில் நாளைய போட்டியில் பலப்பரீட்சை நடத்த வுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் வென்று கெத்து காட்டியது இந்தியா. ஆனால் அடுத்து ராஞ்சி மற்றும் மொகாலி போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக வெற்றியைப் பறிகொடுத்தது. மொகாலி போட்டியில் தவான் 143 ரன்கள் விளாச, 358 ரன்கள் என்ற இமாலய ரன் குவித்தும் ஆஸி வீரர் டர்னரின் கடைசி நேர அதிரடியால் இந்தியா தோற்றது.

4 போட்டி முடிவில் 2- 2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனாக உள்ள நிலையில் நாளைய போட்டியில் இரு அணிகளுக்கும் பைனல் போல் அமைந்துள்ளது. வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் நாளைய போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் என்பது நிச்சயம்.

More News >>