ஈஸியா செய்யலாம் வாழைப்பூ வடை ரெசிபி

வீட்டிலேயே செய்யக்கூடிய வாழைப்பூ வடை ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ -1

துவரம் பருப்பு - 100 கிராம்

கடலை பருப்பு - 100 கிராம்

வெங்காயம் - 3

பூண்டு - 10 பல்

மிளகாய்த்தூள் - 4 ஸ்பூன்

தேங்காய்ப்பூ - கால் மூடி

சோம்பு - 1 ஸ்பூன்

எண்ணெய் -கால் கிலோ

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகிய இரண்டையும் ஊற வைத்து ஒன்றும் பாதியாக அரைக்கவும்.

பின்னர், வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இதனை, சோம்பு, பூண்டு, பார்ப்போடு சேர்த்து மீண்டும் அரைத்து எடுக்கவும்.

இத்துடன், தேங்காய்ப்பூ , பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும்.

இறுதியாக, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான வாழைப்பூ வடை ரெடி..!

More News >>