அடங்காத யுத்தம்.. ட்விட்டர் டிரெண்டிங்கில் #GobackRahul முதலிடம்!

தமிழகம் வருகை தந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக உள்ளிட்ட கட்சிகள் ட்விட்டரில் உருவாக்கிய GoBackRahul, GoBackPappu ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகி உள்ளன.

பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் எனில் அன்று ட்விட்டரில் GobackModi டிரெண்டிங்காக இருக்கும். இதற்கு போட்டியாக அவ்வப்போது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயற்சித்துப் பார்ப்பதும் உண்டு.

இம்முறை GobackRahul என்கிற பாஜகவினரின் ஹேஷ்டேக், இந்திய அளவில் டிரெண்டிங்காகி முதலிடத்தில் உள்ளது,. இதேபோல் GobackPappu ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்பட #VanakkamRahulGandhi ஹேஷ்டேக்கும் கூட டிரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது.

More News >>