தனுஷ்கோடிக்குள் ஊடுருவிய இலங்கை நபர் கைது
தனுஷ்கோடிக்குள் ஊடுருவிய இலங்கை நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் யுத்த முடிந்த பின்னரும் கூட அங்கிருந்து அகதிகளாக தமிழகம் வருகை தருகின்றனர். தமிழக அகதிகள் முகாம்களில் இருந்து கள்ளத்தோணி மூலமாக இலங்கைக்கு திரும்புகின்றனர்.
மேலும் இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவுக்கும் படகுகளில் செல்வதும் அவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பது, பின்னர் இலங்கையிடம் ஒப்படைப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தனுஷ்கோடியில் இலங்கையை சேர்ந்த ஒருவர் உரிஅ ஆவணங்கள் இல்லமால் வருகை தந்திருந்தது தெரியவந்தது. அந்நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.