டெல்லியில் இருந்து தமிழக அரசை இயக்குவது தமிழகத்தை அவமதிப்பது- ராகுல் சுளீர்
டெல்லியில் இருந்து தமிழக அரசை இயக்குவது என்பது தமிழகத்தை அவமதிப்பதாகும் என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
தமிழகம் வருகை தந்த ராகுல் காந்தி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ரபேல் விவகாரத்தில் விதிமுறைகளை மீறி பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். நாக்பூரில் இருந்து இந்திய ஆட்சியை நடத்தக் கூடாது.
டெல்லியில் இருந்து தமிழகத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கவும் கூடாது. டெல்லியில் இருந்து தமிழக ஆட்சியை இயக்குவது தமிழகத்தை அவமதிப்பதாகும்.
சிறு, குறுந்தொழில்கள் வளர்ந்தால்தான் வேலைவாய்ப்புகள் உருவாகும், உற்பத்தித்துறையில் சீனாவுடன் போட்டியிட முடியும் என்பதை தமிழகம் நிரூபித்துள்ளது.
ஆனால் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள்தான் மத்திய அரசின் தாக்குதலுக்குள்ளாகி உள்ளன. நான் இப்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளேன்.
இதேபோல் பிரதமர் மோடி இதுவரை எத்தனை முறை செய்தியாளர்களை சந்தித்த்ருக்கிறார்? வேலை இல்லாத திண்ட்டாட்டம்தான் முக்கிய பிரச்சனை. அதேபோல் விவசாயிகளின் பிரச்சனை.
காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். புல்வாமாவில் 45 ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான மசூத் அசாரை விடுதலை செய்தது பாஜக அரசுதான். தமிழ் கலாசாரம் உட்பட மாநிலங்களின் கலாசாரங்கள் தாக்குதலுக்குள்ளகி உள்ளன
தற்போது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுமே ஓரணியில் ஒன்று திரண்டுள்ளன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கான சட்டப்படியான நடவடிக்கையை ஆதரிக்கிறோம்.
எங்களுக்கு யார் மீதும் விரோதமோ, குரோதமோ இல்லை. அவற்றை எல்லாம் நாங்கள் தீர்த்துவிட்டோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.