பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு விரைவில் மூடுவிழா? 1.68 லட்சம் ஊழியர்களுக்கு நோ சம்பளம்
மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ல் 1.68 லட்சம் ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படாதது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பலவீனப்படுத்தி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு லாபம் ஈட்டித்தர முயற்சிக்கிறது மோடி அரசு என்பது குற்றச்சாட்டு. இந்த நிலையில் கடந்த 18 ஆண்டுகளில் முதல் முறையாக முழு நேர பி.எஸ்.என்.எல். பணியாளர்களுக்கு பிப்ரவரி மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை.
இதேபோல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதம், 6 மாதம் என ஊதியம் வழங்கப்படாமலும் இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதே நிலைமை நீடித்தால் நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கும் நிலை ஏற்படும் என தெரிகிறது.