தேர்தல் வருதுல்ல.. மாவோயிஸ்டுகள் போஸ்டர் ஒட்ட ஆரம்பிச்சுட்டாங்கப்பா!

லோக்சபா தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என ஒடிஷாவில் மாவோயிஸ்டுகள் போஸ்டர்கள் மூலம் எச்சரிக்கை விடுத்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பாதை திருடர் பாதை என்பது மாவோயிஸ்டுகளின் முழக்கம். இதனை வலியுறுத்தி ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மாவோயிஸ்டுகள் நடத்தி வருகின்றனர்.

ஆனால் கடந்த காலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு இருந்த செல்வாக்கு இப்போது இல்லை. மாவோயிஸ்டுகளிடையே ஏற்பட்ட குழப்பம், அடுத்தடுத்து சரண்கள், பொதுமக்களிடம் இருந்து அன்னியமாதல் இவைதான் காரணமாக கூறப்படுகிறது.

தற்போது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவோயிஸ்டுகள் வலியுறுத்தி போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

கந்தமால் மாவட்டத்தின் பல கிராமங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகளின் எதிர்ப்பை மீறி பிரசாரம் செய்தால், வாக்களித்தால் அவர்களை தண்டிப்பது மாவோயிஸ்டுகள் வழக்கம் என்பதால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

More News >>