பொள்ளாச்சி பலாத்காரம்... மேலும் 4 வீடியோக்கள் .. இணங்க மறுத்த பெண்ணை மிரட்டும் பார் நாகராஜ்!
பொள்ளாச்சி பலாத்காரம் தொடர்பாக மேலும் 4 புதிய வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதில் அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ், இணங்க மறுக்கும் பெண்ணை மிரட்டுவது இடம் பெற்றுள்ளது.
பொள்ளாச்சி பலாத்காரம் தொடர்பான கதறும் பெண்ணின் அவலத்துடன் முதலில் வீடியோ வெளியானது. தமிழகத்தையே பதற வைத்தது அந்த வீடியோ.
இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் குற்றவாளிகளை சரமாரியாக தாக்கும் வீடியோக்களும் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து மேலும் 4 புதிய வீடியோக்கள் இன்று வெளியாகி உள்ளன. அதில் அதிமுக பிரமுகரான பார் நாகராஜ் இடம்பெற்றிருக்கிறார்.
இணங்க மறுத்த பெண்ணை பார் நாகராஜன் மிரட்டுகிற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதுவரை பார் நாகராஜன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இதனிடையே நாகராஜனுக்கு சொந்த டாஸ்மாக் பாரை பொதுமக்கள் இன்று அடித்து நொறுக்கி சூறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.