கெட்டுப்போகாத மாம்பழ ஜூஸ் ரெசிபி

மாம்பழ ஜூஸ் கெட்டுப்போகதபடி, பிரிட்ஜில் வைத்து பருகும் வகையில் மாம்பழ ஜூஸ் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாம்பழத் துண்டு - ஒரு கப்

சர்க்கரை - ஒன்றரை கிலோ

தண்ணீர் - ஒன்றரை லிட்டர்

கேஎஸ்எம் பவுடர் - முக்கால் டீஸ்பூன்

சிட்ரிக் ஆசிட் - 4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மாம்பழ துண்டுகளை ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன், கேஎஸ்எம் பவுடர் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அத்துடன், சிட்ரிக் ஆசிட் சேர்த்து நன்றாக கிளறி கொதிக்க வைக்கவும்.

சர்க்கரை நன்றாக கரைந்ததும் அரைத்து வைத்த மாம்பழ ஜூஸை ஊற்றி நன்றாக கலக்கி கொதிக்கவிடவும்.

இந்த கலவை கொஞ்சம் கெட்டியாக மாறியதும், வடிகட்டியில் வடிகட்டி ஆறவிடவும்.

ஜூஸ் ஆறியதும், ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து எப்போது வேண்டும் என்றாலும் பருகலாம்.

அவ்ளோதாங்க.. சுவையான மாம்பழ ஜூஸ் ரெடி..!

More News >>