ருசியான வெங்காய சட்னி ரெசிபி

இட்லி, தோசைக்கு ஏற்ற ருசியான வெங்காய சட்னி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - ஒரு பௌல்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 6

புளி - ஒரு துண்டு

கறிவேப்பிலை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் 4 காய்ந்த மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன், புளி துண்டு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர், இதனை ஆறவைத்து, மிக்சி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில், எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கியதும் அரைத்து வைத்த சட்னியை சேர்த்து கிளறி இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான வெங்காய சட்னி ரெடி..!

More News >>