விஜய் சேதுபதி படத்துக்கு இசையமைக்கும் இசைஞானி

சீனு ராமசாமி இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ என்ற படத்தறிகு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதியும், சீனு ராமசாமியும் நான்காவது முறையாக இணைய இருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுமட்டுமல்ல, இளையராஜா முதன்முதலாக தன் மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவோடு சேர்ந்து இப்படத்தில் இசையமைக்கிறார்.

தற்போது, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘கண்ணே கலைமானே’ படத்தை இயக்கி வரும் சீனு சாமி, இதன் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து மாமனிதன் படம் தொடங்க இருக்கிறார்.

More News >>