லோக்சபா தேர்தல்:2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்.- பிரியா தத், ராஜ் பப்பருக்கு வாய்ப்பு!

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. நடிகர் சுனில் தத் மகள் பிரியா தத், ராஜ் பப்பர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. மகாராஷ்டிராவின் 5 தொகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதில் இடம்பெற்றிருந்தனர்.

ராஜ்பப்பர் மொரதாபாத், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீபுஇரகாஷ் ஜெய்ஸ்வால் கான்பூரில் போட்டியிடுகின்றனர்.வ் வடக்கு மத்திய மும்பையில் பிரியா தத் போட்டியிடுகிறார்.

இதுவரை உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 27 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>