அரிய குணம் கொண்ட அருகம்புல் சாறு - தினமும் அருந்தி வந்தால் ஆயுசு நூறு
எளிதாக கிடைக்கும் அருகம்புல்லில், அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. பல நோய்களுக்கு நிவாரணியாக உள்ள அருகம்புல்லை சாறாக்கி, தினமும் அருந்தி வரலாம்.
மேற்கத்திய உணவுகள் மீதான் மோகம் ஒருபுறம் இருந்தாலும், பாரம்பரிய இயற்கை உணவுகள் மீது மக்களுக்கு கவனம் திரும்பியுள்ளது. வியாதிகளின் எண்ணிக்கை பெருகி, அவதிகளை அனுபவிக்க தொடங்கியதுமே கம்பங்கூழ், திணை, கேழ்வரகு, சாமை போன்றவற்றின் அருமை, நம்மவர்களுக்கு தெரிகிறது.
நம் வீட்டை சுற்றி எளிதில் கிடைக்கும் அருகம்புல்லின் அருமையை, இன்று பலர் உணரத் தொடங்கியுள்ளனர். அதன் சாற்றை தினமும் பருகி, மருந்து இல்லாமல் உடல் நலனை பேணுகின்றனர்.
அருகம்புல் சாறு தினமும் காலை அருந்துபவர்களுக்கு உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள், சிறுநீர் மூலமாக வெளியேறும். அஜீரணம், வாயுத்தொந்தரவுகளை குணப்படுத்துகிறது. மாதவிடாய் காலத்தில் அதிகம் ரத்தபோக்கை தடுக்கிறது.
கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும். வெள்ளைப்போக்கு, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு அருந்துவது நல்லது. சிறுநீரகங்களில் கற்கள் உண்டாவதை தடுத்து, சிறுநீரை பெருக்கும். அதிக பசியை கட்டுப்படுத்தும். உடல் பருமன் மற்றும் உடல் எடை குறைக்கும்.
எலும்புகளுக்கு உறுதியை தரும் மக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள், இதில் உள்ளன. சுவாச பிரச்சனைகள் ஆஸ்துமா போன்றவை நுரையீரல் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்துவதாக, இதை தினமும் பருகியவர்கள் சொல்கிறார்கள். நரம்புகள் வலுப்பெற்று, வாத நோய்களையும் அருகம்புல் சாறு தடுக்கிறது.
மூல நோய் பாதிப்பு உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வருவது நல்ல பலனை தரும். குடல் புண்களையும் இது குணப்படுத்துகிறது. மருத்துவ குணங்கள் நிரம்பிய அரும்கம்புல் சாற்றை தினமும் பருகி வந்தால், மருத்துவரை நாட வேண்டிய தேவையே இருக்காது.