அப்துல் கலாம் பள்ளி மாணவர்களை சந்தித்து பேசுகிறார் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் அப்துல்கலாம் படித்த பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அவரது கட்சிப் பெயரை அறிவித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதற்கான பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வருகின்றனர்.

இதற்காக ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவிக்கிறார் என்றும் கொடி, சின்னத்தையும், தனது கட்சியின் கொள்கை திட்டங்களையும் அவர் விளக்கி பேசுகிறார் என்று தெரிகிறது. இதற்கிடையில், சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க சென்னையில் ரசிகர்களை கமல்ஹாசன் சந்தித்தார்.

அரசியல் பயணத்தை தொடங்கும் கமல்ஹாசன் ராமேசுவரத்தில் அப்துல் கலாமின் வீட்டில் அவரது அண்ணன் முத்து மீரா மரைக்காயரை சந்தித்து பேசுகிறார். பின்னர் ராமேசுவரத்தில் அப்துல்கலாம் படித்த பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

More News >>