`உலகக்கோப்பை ப்ளேயிங் லெவனில் யார் யார் இடம் பெறுகிறார்கள் - விராட் சொன்ன தகவல்

உலகக்கோப்பை போட்டிகளில் ஆடவுள்ள பிளேயிங் லெவன் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை ஏற்கனவே இழந்த நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியிலும் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரை இழந்தது. இதன்மூலம் கோலி தலைமையிலான இந்திய அணி 28 மாதங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் கோப்பையை நழுவவிட்டது. மற்ற தொடர்களை இந்த ஆஸ்திரேலிய தொடர் அவ்வப்போது விமர்சனத்துக்கு உள்ளானது. அதற்கு காரணம் உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணி பங்குபெறும் கடைசி ஒருநாள் தொடர் என்பது தான். இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் வீரர்கள் தேர்வில் நன்றாக செயல்பட்ட இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் சொதப்பியது. உலகக்கோப்பைக்கான பரிசோதனை முயற்சியாக அணி நிர்வாகம் இப்படி செய்தது. இது கடும் விமர்சனத்துக்குள்ளானது. நேற்றைய போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் கோலி, விமர்சனங்களுக்கு பதிலளித்தார். அதில், ``நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி அடித்தது எட்டக்கூடிய ஒரு ஸ்கோர் தான்.

ஆனால் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆட்டத்தை எங்கள் வசம் இருந்து எடுத்து சென்று விட்டனர். இந்த தொடர் முழுவதும் ஆஸ்திரேலிய வீரர்கள் நேர்த்தியாகவும், நேசித்தும் விளையாடினார்கள். அவர்கள் விளையாடியதை பார்த்தாலே இது தெரியும். இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் தான் அவர்கள். உலகக்கோப்பை தொடரில் ஒரு அணிக்கு மட்டும் வாய்ப்பு இருப்பதாக கருதிவிட முடியாது. இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என பல அணிகள் பலமாக இருக்கின்றன. ஆஸ்திரேலிய அணியும் மேம்பட்டுள்ளது. பாகிஸ்தானை பொறுத்தவரை எந்த அணியையும் வீழ்த்தும் திறன்கொண்டது. அதேநேரம் நாங்களும் பலமான அணியாக இருக்கிறோம். ஆனால் எந்த மனநிலையில் தொடருக்கு செல்கிறோமோ அதை பொறுத்து தான் வெற்றியும், தோல்வியும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தோல்வியடைந்ததால் எங்கள் வீரர்களுக்கு எந்த பயமும் இல்லை. உலகக்கோப்பை போட்டிகளில் ஆடவுள்ள பிளேயிங் லெவன் குறித்து உறுதியாக இருக்கிறோம். யார் யார் ப்ளேயிங் லெவனில் இடம்பெறப் போகிறார்கள் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் ஆட்டத்தின் தேவையை பொறுத்து சிறிய மாற்றங்கள் அவ்வப்போது இருக்கும். பிளேயிங் லெவன் விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் வருகையின் போது அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டும் கூடுதல் பலம் பெறும். நாங்கள் அணியாக எங்கு இருக்கிறோம் என்பதை அறிவோம்" என்றார்.

More News >>