விஜயகாந்துடன் டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் டாக்டர் ரமாதாஸ் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கியது முதலே பாமகவுடன் முட்டல் மோதல்தான். அதுவும் பாமக செல்வாக்காக இருந்த வட தமிழகத்தில் தேமுதிக களமிறங்கி விஜயகாந்த் வெற்றியும் பெற்றார்.
இதனால் தேமுதிகவையும் விஜயகாந்தையும் பாமக மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது. தேர்தல் களங்களில் கூட்டணி அமைந்த போதும் கூட இரு கட்சி தொண்டர்களும் ஒருவருக்கு ஒருவர் இணைந்தும் பணியாற்றிவில்லை.
தற்போதைய லோக்சபா தேர்தலில் அதிமுக-பாஜக அணியில் பாமகவும் தேமுதிகவும் இடம்பிடித்துள்ளன. பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதே அளவு தொகுதிகள் தங்களுக்கும் வேண்டும் என தேமுதிக அடம்பிடித்து பார்த்தது.
ஆனால் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இருந்த போதும் தேமுதிக- பாமக இணைந்து தேர்தல் பணியை மேற்கொள்ளுமா? என்கிற சந்தேகம் இருந்து வந்தது.
இந்நிலையில் திடீரென விஜயகாந்தை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.