உலகக்கோப்பைக்கு இந்த அணியா நோ.. நோ - விராட் கோலியைச் சாடும் கம்பீர்

உலகக்கோப்பை அணி குறித்த கோலியின் பேச்சுக்கு கம்பீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பேசிய விராட் கோலி, ``இன்றைய போட்டியில் விளையாடும் வீரர்களே ஏறக்குறைய உலகக்கோப்பை போட்டிகளிலும் பங்கேற்பார்கள். இவர்களுடன் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா சேர்ந்துகொள்வார்கள். மற்றபடி பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. ஒரேயொரு இடம் பற்றிய கேள்விதான் இருக்கிறது" எனக் கூறியிருந்தார். கோலி கூறிய இந்த பிளேயிங் லெவன் குறித்து முன்னாள் வீரர் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ``உலகக்கோப்பைக்கான இந்திய பிளேயிங் லெவன் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டு விட்டது. ஐபிஎல் பிறகு உலகக்கோப்பைதான் என்பதால் அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. தற்போதுள்ள அணி மீது எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் இந்த அணி நிச்சயம் உலகக்கோப்பைக்கான சிறந்த இந்திய அணியாக இருக்க முடியாது என்று உத்தரவாதமாகக் கூறுகிறேன். விராட் கோலி பார்வையில் இது இந்தியாவின் உலகக்கோப்பை அணியாக இருக்கலாம். ஆனால் இந்த லெவன் நிச்சயம் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இல்லை. தோனியை இந்த அணியில் சேர்த்தாலும் கூட இந்த பிளேயிங் லெவனில் எந்த ஒரு வலுவும் ஏற்பட்டுவிடப்போவதில்லை" எனக் கூறியுள்ளார்.

More News >>