திமுக - காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்து தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக நாளை அறிவிப்பு

மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக, திமுக - காங்கிரஸ் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தொகுதிகள் குறித்த விவரங்கள், நாளை முறைப்படி வெளியிடப்படுகிறது.

 

மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இக்கட்சிக்கு புதுச்சேரி உள்பட, மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வதற்காக, கே.எஸ்.அழகிரி தலைமையில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு, அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் தலைமையிலான தி.மு.க. குழுவினரை சந்தித்து பேச்சு நடத்தியது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை, ஒருநாள் இடைவெளிக்கு பிறகு, இன்று மீண்டும் தொடர்ந்தது.

இதன் முடிவில், இரு கட்சிகள் இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எனினும், போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து நாளை திமுக முறைப்படி அறிவிக்கும் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

More News >>