மும்பையில் ரயில் நடை மேம்பாலம் இடிந்து சேதம் 4 பேர் பலி இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்
மும்பையில் ரயில்வே நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததது. இடிபாடுகளில் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இருபதுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலத்தில், பயணிகள் நெரிசல் அதிகமாக இருந்த, இரவு 7:30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. திடீரென சத்தத்துடன், நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; இதை சற்றும் எதிர்பாராத பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
எனினும் இடிபாடுகளில் பலர் சிக்கினர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 23 காயமடைந்ததாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்த சிலரி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.