வெளியானது அவெஞ்சர் எண்ட் கேம் டிரெய்லர்
உலகமே காத்திருக்கும் அவெஞ்சர் திரைப்படத்தின் நான்காம் பாகமான அவெஞ்சர் எண்ட் கேம் படத்தின் புதிய டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
மார்வெல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் படமே அவெஞ்சர் எண்ட் கேம். 2012ல் அவெஞ்சர் படத்தின் முதல் பாகம் வெளியானது தொடர்ந்து இரண்டாம் பாகமான ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படம் 2015ல் வெளியானது. அதைத்தொடர்ந்து 2018ல் இன்ஃபினிட்டி வார் வெளியானது. இப்போ அவெஞ்சர் திரைப்படங்களின் கடைசி சீக்குவலும், நான்காம் பாகமான அவெஞ்சர் ; எண்ட் கேம் வெளியாக இருக்கிறது. அதன் முன்னோட்டமாக படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது மார்வெல் நிறுவனம். முந்தைய மூன்று பாகங்களை நினைவுப்படுத்தும் விதமாகவும், தானோஸால் பாதி அழிந்த நிலையில் இருக்கும் உலகத்தையும், மீண்டும் அவெஞ்சர்கள் போருக்கு தயாராகுவது போலவும் அமைந்துள்ளது இந்த டிரெய்லர். இந்த டிரெய்லரைப் பார்க்கும் போதே, மிகப்பெரிய விஸுவல் ட்ரீட் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது என்பதும் புரிகிறது. மார்வெலின் அவெஞ்சர் எண்ட் கேம் வரும் ஏப்ரல் 26ல் திரைக்கு வர இருக்கிறது.
Marvel Studios' Avengers: Endgame - Official Trailer : https://goo.gl/y2NQpR