நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருக்கும் புதிய சின்னம் தெரியுமா? தேடிப்பிடித்து தேர்தல் ஆணையம் தந்திருப்பது இதை தான்
மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த சின்னம் கிடைத்திருப்பதால், அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
சீமானை ஒருங்கிணைப்பாளராக கொண்ட நாம் தமிழர் கட்சி, கடந்த முறை தேர்தலில், இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. வரும் மக்களவை தேர்தலிலும், அதே சின்னத்தை வழங்க, தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி இருந்தது. ஆனால், இக்கோரிக்கையை ஆணையம் ஏற்கவில்லை.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அவ்வகையில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைத்துள்ளது.
இனிப்பான மற்றும் மண் மரபு சார்ந்த கரும்புடன், விவசாயி இருப்பது போன்ற சின்னம் கிடைத்திருப்பது, நாம் தமிழர் கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.