தேர்தல் களத்தில் குதிக்க நானும் ரெடி - ஜெ. தீபா அறிவிப்பு
மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைத் தலைவர் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்து தேர்தல் களத்துக்கு தயாராகி விட்டன.
தேர்தல் பற்றிய எந்த அறிவிப்பும் செய்யாமல் மவுனம் சாதித்து வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் ரொம்ப லேட்டாக இப்போது களத்தில் தனித்தே குதிக்கப்போவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மக்களவை மற்றும் 18 சட்டப் பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 16, 17 தேதிகளில் விருப்பம் னுக்களை பெற்று கட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு ஜெ. தீபா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.