நியூசிலாந்தில் மசூதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் குழுவினர்

நியூசிலாந்தில் மசூதிக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் சரமாரியாக சுட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.தொழுகைக்குச் சென்றிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. கிறிஸ்ட்சர்ச் நகரில் தங்கியிருந்த வீரர்கள் இன்று காலை ஹாக் லே பார்க் என்ற இடத்தில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை முடித்து திரும்பினர்.அப்போது ராணுவ சீருடையில் வந்த மர்ம நபர் எந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான்.

கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாகச் சுட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உஷார் அடைந்த நியூசிலாந்து பாதுகாப்பு படையினர் மசூதியை சுற்றி வளைத்தனர். பதுங்கியபடி தொடர்ந்து தப்பாக்கியால் சுட்ட படியே இருந்த மர்ம நபரை கடும் முயற்சிக்குப் பின் சுட்டுக்கொன்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வங்கதேச வீரர்கள் மயிரிழையில் உயிர் தப்பிய தகவலும் வெளியாகி உள்ளது. தொழுகை முடித்து வெளியில் வந்த சமயம் மர்ம நபர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். நாங்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததால் உயிர் பிழைத்தோம். வீரர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளோம் என்று வங்கதேச வீரர் முகமது இஷாம் டிவிட்டரில் பதறிப் போய் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் மசூதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்சிச் சூடு சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஜெசின்டா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நியூசிலாந்து வரலாற்றில் கருப்பு தினம் என்றும் வர்ணித்துள்ளார்.

More News >>