எகிப்து ஸ்குவாஷ் ஓபன் தொடர் - கால் இறுதியில் ஜோஷ்னா சின்னப்பா தோல்வி
எகிப்து ஸ்குவாஷ் போட்டியின் கால் இறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந்தார்.
எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்று வரும் பெண்கள் பிளாக் பால் ஸ்குவாஷ் ஓபன் தொடரில் இந்தியாவின் சார்பில் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா பங்கேற்றார். இதன் முதல் போட்டியில் 8 முறைக்கு மேல் உலக ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற மலேசியாவின் நிகோல் டேவிட்டை ஜோஸ்னா வீழ்த்தினார். இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தின் சாரா ஜேன் பெர்ரியை எதிர்கொண்டவர் அவரையும் 11-4, 6-11, 14-12, 11-9 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி ஜோஸ்னா சின்னப்பா காலிறுதிக்குள் நுழைந்தார்.
கால் இறுதியில் ஜோஷ்னா நுழைந்ததால் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. காரணம் 16-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, 5-ம் நிலை வீராங்கனையான நியூஸிலாந்தின் ஜோயல் கிங்கை எதிர்த்து விளையாடியது தான். 68 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனுபவ வீராங்கனையான ஜோயல் கிங் 7-11, 12-10, 2-11, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் தோல்வியுற்று அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.