திமுக கூட்டணியில் யாருக்கு எந்தத் தொகுதி..?அதிகாரப்பூர்வமாக வெளியானது பட்டியல்
திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரஸ் (9) விடுதலைச் சிறுத்தைகள் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2), மதிமுக (1) இந்திய ஜனநாயகக் கட்சி (1), முஸ்லீம் லீக் (1) கொங்கு நாடு கட்சி (1) தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எஞ்சிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்தாலும் தொகுதி ஒதுக்குவதில் பெரும் இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இந்தப் பட்டியலில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விபரம்:
காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்ட தொகுதிகள்: திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் (தனி) திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் .
மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோயம்பத்துார் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கீடு.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் (தனி) சிதம்பரம் (தனி) ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிமுகவுக்கு ஈரோடு தொகுதியும்,இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியும், கொங்கு நாடு கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பம்டுள்ளது.
வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி உள்ளிட்ட எஞ்சிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது
18 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ஒனட பெற உள்ள இடைத்தேர்தலில் திமுக வே போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.