சத்தான கீரை சீஸ் கட்லெட் ரெசிபி

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரையைக் கொண்டு இன்னைக்கு கீரை சீஸ் கட்லெட் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கப்போறோம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4

பாலக்கீரை - ஒரு பௌல்

பன்னீர் - 100 கிராம்

சீஸ் கட்டி - 2

மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்

ரஸ்க் தூள் - அரை கப்

எண்ணெய் - அரை கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோல் நீக்கிவிட்டு மசித்துக் கொள்ளவும்.

அத்துடன், கழுவி பொடியாக நறுக்கிய கீரை, துருவிய பன்னீர் மற்றும் சீஸ், மைதா, உப்பு தேவையென்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இந்தக் கலவையை கொஞ்சமாக எடுத்து கட்லெட் வடிவத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும். தயார் நிலையில் உள்ள மாவுத் துண்டுகளை ரஸ்க்குத் தூளில் பிரட்டி எடுத்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இதனை, தக்காளி சாஸ்ஸில் தொட்டு சாப்பிட்டால் அடடே..!

சுவையான கீரை சீஸ் கட்லெட் ரெடி..!

More News >>