ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தியை மீண்டும் களம் இறக்கினார் வைகோ

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப் பட்ட ஒரே ஒரு தொகுதியான ஈரோட்டில் ஏற்கனவே எம்.பி.யாக இருந்த கணேசமூர்த்தியை மீண்டும் களம் இறக்கி யுள்ளர் வைகோ.

திமுக கூட்டணியில் பிற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்த நிலையில் வேட்பாளர்கள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் மார்க்சிஸ்ட் கட்சி மதுரைக்கு சு.வெங்கடேசனையும், கோவைக்கு பி.ஆர்.நடராஜனையும் வேட்பாளராக அறிவித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நாகை தொகுதிக்கு செல்வராஜ், திருப்பூர் தொகுதிக்கு சுப்பராயன் என முன்னாள் எம்.பி.க்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிட உள்ள ஒரே ஒரு தொகுதியில் பிரபல சென்னை தொழிலதிபர் நவாஸ் கனியை களத்தில் இறக்கி விட்டுள்ளது. மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஈரோடு தொகுதிக்கு வேட்பாளராக அ.கணேசமூர்த்தியை அறிவித்துள்ளார் வைகோ .

மதிமுக பொருளாளராக இருக்கும் கணேசமூர்த்தி கட்சி தொடங்கிய காலம் வைகோவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். 1998-ல் பழனி தொகுதியிலும், 2009-ல் ஈரோடு தொகுதியிலும் மதிமுக சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கணேசமூர்த்தி என்பதும், கடந்த 2014 தேர்தலிலும் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News >>