வாஜ்பாய் இவர் காலில் விழுந்து ஆசி பெற்றார்..மதுரை பெண்ணுக்கு பத்மஸ்ரீ விருது!

விளையாட்டு, சமூக சேவை, இசை உள்ளிட்ட துறைகளில் திறம்படச் செயலாற்றியவர்களைக் கவுரவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி இந்திய அரசு சிறப்பித்து வருகிறது.

அதன் வகையில், டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் கட்டமாக நடைபெறும் இவ்விழாவில் மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி சின்னப் பிள்ளைக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரப்படுத்தினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

எழுதப் படிக்கத் தெரியாத சின்னப் பிள்ளை கிராமப்புற மகளிர் இடையில் சிறுசேமிப்பு திட்டத்தை ஊக்குவித்து மேலும், சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார். இவரது, சேவை தமிழகம் முழுவதும் பரவி, பலரது பாராட்டைப் பெற்றது. அதோடு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2001-ம் ஆண்டு மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில் இவரது காலில் விழுந்து வணங்கினார். இந்த நிகழ்வு அன்று மட்டுமல்லாமல் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் பொறியியல் துறைக்காக, விஞ்ஞானி நம்பி நாராயணனுக்குப் பத்ம பூஷண், பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நட்ராஜ், பாஸ்கெட்பால் வீராங்கனை பிரஷாந்தி சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பிர், இந்திய புட்பால் அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உள்ளிட்டோருக்குப் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

 

 

More News >>