இந்திய சினிமாவில் இதுவரை நடக்காத ஒரு ஆச்சர்ய காட்சி! - காப்பான் ஸ்வாரஸ்ய அப்டேட்ஸ்
சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் படம் காப்பான். இந்திய சினிமாவில் இதுவரை நடக்காத ஒரு ஆச்சரிய சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது இப்படக்குழு.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 37வது திரைப்படம் காப்பான். லண்டனில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது இந்தியா முழுவதும் நடந்துவருகிறது. தற்பொழுது இப்படத்துக்கான கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
இந்திய சினிமா வரலாற்றிலேயே இதுவரை நடக்காத அளவுக்கு ஒரு பிரம்மாண்ட சண்டைக்காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அது என்னவென்றால், ஓடும் தொடர்வண்டியில் வைத்து சண்டைக் காட்சியை படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்காக இந்தியா முழுவதும் சுற்றித் தேடி அலைந்து இறுதியாக ஒரிசாவில் பயன்படுத்தப் படாத நீண்ட தொடர்வண்டிப் பாதையை கண்டுப்பிடித்திருகிறார்கள். இதில் படப்பிடிப்பை நடத்துவதற்காக இரண்டு ரயில்களையும் வாடகைக்கு எடுத்திருகிறது படக்குழு.
கடந்த மார்ச் 10ம் தேதி ஒரிசாவில் தொடங்கிய படப்பிடிப்பு இன்னும் தொடர்ந்து நடந்துவருகிறதாம். சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய திரையுலகையுமே திரும்பி பார்க்கவைக்கும் அளவுக்கு வித்தியாசமான ஒரு சண்டைக்காட்சியாக இருக்கும் என நம்புகிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.
மோகன்லால், ஆர்யா, பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள் இப்படத்துக்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துவருகிறார். படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.