பொள்ளாச்சி விவகாரம்கோவை எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க ஆட்சேபனை இல்லை - தமிழக தேர்தல் அதிகாரி

பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் வழக்கை திசைதிருப்ப முயன்றதான குற்றச்சாட்டில் கோவை எஸ்.பி. மீது நடவடிக்கை எடுப்பதில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அடையாளங்களை அம்பலப்படுத்திய கோவை எஸ்.பி.பாண்டியராஜனுக்கு பல தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. உச்ச நீதிமன்ற அறிவுரையை மீறி எஸ்.பி. செயல்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகளும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்திருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது எஸ்.பி.பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எந்த ஆட்சேபணை இல்லை. ஆனால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்ற தகவலை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

More News >>