சுவையானத் தேன் உருளைக்கிழங்கு ஃபிரை ரெசிபி
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேன் உருளைக்கிழங்கு ஃபிரை ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிறிய உருளைக்கிழங்கு - 100 கிராம்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
செய்முறை:
முதலில், உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி ஆங்காங்கே குச்சி வைத்து குத்திவிடவும்.
இத்துடன், சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, ஒரு டேபிள் ஸ்பூன் தேன், பச்சை மிளகாய், மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து சுமார் 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
இதன்பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து நன்றாக கிளறி வறுத்து இறக்கவும்.
வறுத்த உருளைக்கிழங்கை ஒரு பிளேட்டில் வைத்து கொஞ்சம் ஆறியதும், மீதமுள்ள தேனை அதன்மீது ஊற்றி பரிமாறவும்.
அவ்ளோதாங்க.. சுவையான தேன் உருளைக்கிழங்கு ஃபிரை ரெடி..!