இயற்கையான ரோஜா பர்ஃப்பி ரெசிபி
வீட்டிலேயே, இயற்கையான ரோஜா மற்றும் செம்பருத்தி பூ இதழ்களைக் கொண்டு பர்ஃப்பி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூக்கம் - 6
ரோஜா இதழ்கள் - அரை கப்
கடலை மாவு - ஒரு கப்
சர்க்கரை - ஒன்னே முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 6 டீஸ்பூன்
பாதாம், முந்திரி - தலா 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில், செம்பருத்திப் பூவின் இதழ்கள் மற்றும் ரோஜாப்பூவின் இதழ்களை சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில், இரண்டு ஸ்பூன் நெய்விட்டு, கடலை மாவை சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில், கொஞ்சம் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு தயாரிக்கவும்.
பாகு வந்தவுடன், வறுத்து வைத்த மைதா மாவு, செம்பருத்தி & ரோஜா விழுது, நெய், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கிளறி பர்ஃப்பி பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.இந்த கலவையை ஒரு தட்டில் கொட்டி சமம் செய்து அதன் மீது, வறுத்த முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
அவ்ளோதாங்க.. சுவையான ரோஜா இதழ் பர்ஃப்பி ரெடி..!