`பாக்கதான போறீங்க இந்த சென்னையோட ஆட்டத்த - தோனியுடன் செம பீலிங்கில் ஹர்பஜன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

2019-ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி வரும் 23-ம்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னையில் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனால் டிக்கெட் வாங்க ரசிகர்கள் நேற்று குவிந்தனர்.

முதல் போட்டியில் விளையாடவுள்ள சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சிக்கிடையே விளம்பர சூட்டிங்கிலும் கலந்து கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக தோனி, கேதர் ஜாதவ், முரளி விஜய் உள்ளிட்ட வீரர்களுடன் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ள வீடியோ ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹர்பஜன், ``வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கிவெக்கல அதுக்குள்ள ஷூட்டிங்கா. தல தோனி பாட்டு போட நான் விஜய், ஜாதவ் டான்சு ஆட ஒரே டமாசுதான் போங்க. ரெண்டு மாசமும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான். ஆனா ஆட்டம்னு வந்துட்டா பாக்கதான போறீங்க இந்த சென்னையோட ஆட்டத்த" எனப் பதிவிட்டிருந்தார்.

இதேபோல் ரெய்னா உடன் உள்ள ஒருபுகைப்படத்தை பதிவிட்டு, ``நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே இன்பம் வரலாம் துன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்" என முஸ்தபா... முஸ்தபா... பாடலின் வரிகளைக் குறிப்பிட்டு, ``செம பீலிங் வித் மச்சான் தோனி, மாப்ள ரெய்னா" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

More News >>