உறுதியானது உறியடி 2 ரிலீஸ் தேதி

நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகிவரும் உறியடி இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது.

இயக்குநர் விஜயகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, இயக்கி வெளியான திரைப்படம் உறியடி. சாதிய சாடலையும், சமூகப் பிரச்னையையும், அரசியலுக்கு எதிரான சாட்டையாகவும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் உறியடி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 2டி நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்துவருகிறார். இரண்டாம் பாகத்திலும் விஜயகுமாரே நடித்து, இயக்கி வருகிறார். தற்பொழுது படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் இப்படத்தை மே 17ல் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

முதல்பாகம் போலவே, இரண்டாம் பாகமும் அழுத்தமான ஒரு சமூக செய்தியை சொல்லவிருக்கிறது. தவிர, காதலுக்கும், நகைச்சுவைக்கும் அதிக காட்சிகள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கேரள நடிகையான விஸ்மயா, மெட்ராஸ் சென்ட்ரல் சுதாகர் இப்படத்தில் நடிக்கிறார்கள். தவிர, 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் படத்திற்கு இசையமைத்துவருகிறார்.

More News >>