தீராத புற்றுநோய்.... - காலமானார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்

உடல்நலக்குறைவால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று இரவு காலமானார்.

கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவந்தார். இதைத் தொடர்ந்து கோவா திரும்பிய அவர் அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். சிகிச்சை எடுத்துக்கொண்டே கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கலந்துகொண்டிருந்தார். சிகிச்சைக்கு பின் மூக்கில் குழாய் பொருத்தப்பட்ட நிலையில் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்ட அவர் ஒருவரின் துணையுடனே நடந்து செல்லும் நிலையில் இருந்தார்.

பட்ஜெட்டுக்கு பின் கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்த வந்தார். இந்நிலையில், பாரிக்கரின் உடல்நிலை இன்று மோசமடைந்தது. அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று இரவு 8 மணியளவில் மனோகர் பாரிக்கர் உயிரிழந்ததாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். அவரது மறைவை அடுத்து பாஜக தலைவர்கள் கோவா விரைந்துள்ளனர். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பாரிக்கர் மறைவுக்கு நாளை மத்திய அமைச்சரவை சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது.

More News >>