இணைய இணைப்பு இல்லாமல் சினிமாக்களை பார்ப்பது எப்படி?
யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் பயன்படுத்தி திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்போர், இணைய இணைப்பில்லாத இடங்களில் திகைத்துப்போவர். இணைய இணைப்பு இல்லாத இடங்களில் பார்ப்பதற்காக முன்னரே திரைப்படங்கள் மற்றும் விருப்பமான நிகழ்ச்சிகளை தரவிறக்கம் (download) செய்து வைத்துக் கொள்ளலாம்.
யூடியூப்
உலகின் பல பகுதிகளில் யூடியூப்பில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்து காப்புரிமையை (copyright) மீறும், சட்டத்திற்குப் புறம்பான செயல். தரவிறக்கம் செய்வதற்கு மூன்றாம் நபர் சேவைகளை பயன்படுத்துவது யூடியூப் நிறுவனத்தின் விதிகளை மீறுவதாகும். விதிகளை மீறாமல் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய, 'இணைய இணைப்பில்லாமல் பார்ப்பதற்கு' (offline viewing) என்ற வசதியை பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், ஐபோன் ஆகியவற்றில் யூடியூப் செயலியை திறக்கவும். இணைய இணைப்பில்லாமல் (offline viewing) பார்க்க விரும்பும் வீடியோவின் மேல்
சொடுக்கவும் (Tap).
வீடியோ தலைப்பின் கீழ் இருக்கும் 'பகிர்' (Share)மற்றும் 'சேர்க்க' (Add) என்ற பொத்தான்களுக்கு நடுவே இருக்கும் 'தரவிறக்கம்' (Download) என்ற பொத்தானை சொடுக்கவும்.
பிறகு, எந்த தரத்தில் வீடியோ (video quality) தரவிறக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்யவும்.
அதன் பின்னர், அனுமதி (OK) அளிக்கவும்.
நெட்ஃபிளிக்ஸ்
யூடியூப்பை போன்று நெட்ஃபிளிக்ஸும் திரைப்படம் மற்றும் நிகழ்ச்சிகளை தரவிறக்கம் செய்து பார்க்க அனுமதிக்கிறது. எல்லா நிகழ்ச்சிகளும் இணைய இணைப்பில்லாமல் பார்க்கக் கிடைக்காது. ஆனாலும், ஏராளமான வீடியோக்கள் அவ்வகை அனுமதியோடு கிடைக்கிறது. போனில் மட்டுமல்லாமல் வெளிப்புற சேமிப்பகத்திலும் (SD Card) இவற்றை சேமிக்கலாம். ஆனால், அவ்வாறு சேமிக்கப்பட்டவற்றை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள இயலாது.
உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் நெட்ஃபிளிக்ஸ் செயலியை நிறுவிக் கொள்ளவும்.
நீங்கள் தரவிறக்கம் செய்ய விரும்பும் நிகழ்ச்சி அல்லது திரைப்படத்தின் மீது சொடுக்கவும்.
இடப்புறம் மேலே உள்ள பட்டியை (menu) சொடுக்கவும். அது மூன்று கிடைமட்ட கோடுகள் போன்று தெரியும்.
தரவிறக்கத்திற்கு கிடைப்பவை (Available for Download) என்ற பொத்தானை சொடுக்கவும்.
வெளிப்புற சேமிப்பகத்தில் (SD Card) சேமிக்க அதற்கான அனுமதியை வழங்கவும்.
பார்த்தபிறகு தரவிறக்கம் செய்யப்பட்டவற்றை நீங்கள் அழித்துக் கொள்ளலாம்.
அமேசான் பிரைம் வீடியோ
உங்கள் போனில் அமேசான் பிரைம் வீடியோ செயலியை நிறுவிக் கொள்ளவும்.
நீங்கள் தரவிறக்கம் செய்ய விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது திரைப்படத்தை கண்டுபிடிக்கவும்.
அந்த வீடியோவுக்கான குறியீட்டை (ஐகான் - ICON) சொடுக்கவும்.
பிறகு தரவிறக்கத்திற்கான பொத்தானை சொடுக்கவும்.