உபியில் காங்கிரசின் குசும்புத்தனம்...!ஆவேசமடைந்த மாயாவதி

உ.பி.யில் சோனியா, ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதிகளில் சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தாததற்கு பிரதி பலனாக காங்கிரசும் 7 தொகுதிகளில் போட்டிபிடப் போவதில்லை என தாராளம் காட்ட... மாயாவதியோ, எங்கள் கூட்டணியில் குழப்பம் செய்யப் பார்க்கிறது காங்கிரஸ் என்று அலறி.. உங்க ஆதரவே வேண்டாம் என்று ஆவேசமடைந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆட்சியை நிர்ணயிப்பதில் 80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யின் பங்கு முக்கியமானது. பாஜகவை வீழ்த்த இதுவரை எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் ஆட்சியும் கூட்டணி சேர்ந்துள்ளன. காங்கிரசும் இந்தக் கூட்டணியில் சேர முயற்சித்து கடைசியில் லடாய் ஆகிவிட்டது. ராஷ்டிரிய லோக்தளம், அப்னா தள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் கொடுத்து விட்டு சரி சமமாக தொகுதிகளை பங்கு பிரித்துள்ளது சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி, சோனியா போட்டியிடும் ரேபரேலி தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்துவதில்லை என அறிவித்துள்ளனர்.

சோனியா, ராகுலுக்கு சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணி விட்டுக் கொடுத்ததற்கு பரிகாரமாக உ.பி.மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பகுஜன் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம், அகிலேஷ் மனைவி டிம்பிள் , மற்றும் ராஷ்டிரிய லோக்தள், அப்னா தள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது என்றார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த பெருந்தன்மையில் ஏதோ உள்குத்து உள்ளது. எங்கள் கூட்டணியில் குழப்பம் செய்யப் பார்க்கிறது காங்கிரஸ் என்றெல்லாம் புலம்பித் தள்ளிவிட்டார் மாயாவதி . அத்துடன் பாஜகவை வீழ்த்த எங்கள் பலமே போதும். உங்கள் ஆதரவெல்லாம் துளியும் தேவையில்லை. மரியாதையாக எல்லாத் தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தப் பாருங்கள் என்று ஆவேசமடைந்துள்ளார் மாயாவதி.

More News >>