கூடைச்சின்னத்தை கண்டு பதறும் தேமுதிக ...பட்டியலில் இருந்த நீக்கக் கோரிக்கை

சுயேட்சை சின்னமான மூங்கில் கூடைச் சின்னம் முரசு சின்னத்தைப் போலவே இருப்பதால் அந்தச் சின்னத்தை பட்டியலில் இருந்தே நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தேமுதிக முறையிட்டுள்ளது.

தேமுதிக ஆரம்பிக்கப்பட்டு முதல் தேர்தலிலேயே 10% அளவுக்கு வாக்குகளைப் பெற்றதால் முரசு சின்னத்தை நிரந்தரமாக வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் சுயேட்சைகளுக்கான சின்னங்கள் பட்டியலில் கூடைச் சின்னம் இருப்பது தேமுதிகவினருக்கு இடையூறாகவே இருந்து வருகிறது.

வாக்காளர்களைக் குழப்புவதற்காக திட்டமிட்டு சுயேட்சைகளை களமிறக்கும் தேமுதிக வுக்கு எதிரான கட்சியினர் கூடைச் சின்னத்தில் நிற்க வைத்து விடுகின்றனர். இதனால் சில தொகுதிகளில் கூடைச் சின்னத்தில் போட்டியிடும் அடையாளமே தெரியாத சுயேட்சைகள் கூட ஆயிரக்கணக்கில் ஓட்டுக்கள் பெற்று விடுகின்றனர். இதனாலேயே சில தொகுதிகளில் தேமுதிக தோல்வியடைந்த சோகமான வரலாறும் அக்கட்சிக்கு உண்டு.

அதனால் வரும் தேர்தலிலும் தேமுதிகவுக்கு எதிராக திமுக கூட்டணி இந்த குப்பைக் கூடை யுக்தியை கையாளும் என்று தேமுதிக தரப்பில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் சின்னங்கள் பட்டியலில் இருந்தே குப்பைக் கூடையை நீக்கி குப்பையில் போட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் முறையிட்டுள்ளனர். இந்தக் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவு செய்யும் என சாகு தெரிவித்துள்ளார்.

More News >>