தமிழ் பெண் அரசியல்வாதியாகும் சன்னி லியோன்
பாலிவுட் நடிகை சன்னி லியோன் டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த தம்பதி கடந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையைத் தத்தெடுத்தனர். மேலும், சன்னி லியோன் – வெபர் தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இரு ஆண் குழந்தைகள் பிறந்தது. `திருமண வாழ்க்கையில் குறுகிய காலத்திலேயே மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகிவிட்டோம்’ என்று சன்னி லியோன் மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். குடும்பம் குழந்தைகள் என பிஸியாக இயங்கி வரும் சன்னி லியோன் சினிமாவில் நடிக்கவும் அவ்வபோது நேரம் ஒதுக்கி வருகிறார்.
பாலிவுட் கதாநாயகியாக வலம் வந்த சன்னி லியோன், வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஜெய்யுடன் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வடிவுடையான் இயக்கும் சரித்திரப் படமான `வீரமாதேவி’ படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் வடிவுடையானின் அடுத்த படத்திலும் சன்னிலியோன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் அரசியல் கதை என்றும் `டில்லி’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக பெண் அரசியல்வாதியாக சன்னி லியோன் நடிக்க உள்ளாராம்!