வீட்டிற்கு செல்ல காசு இல்லை...100-க்கு அழைத்து போலீஸ் காரில் சென்ற இளைஞர்
வீட்டிற்குச் செல்ல கையில் காசு இல்லாததால் காவல் உதவி எண்ணான 100-க்கு அழைத்துள்ளார் உ.பி-யை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
`காவல்துறை உங்கள் நண்பன்' என்ற வாங்கியது பொருந்தும் ஒரு சுவாரசிய நிகழ்வு உத்தரபிரதேச மாநிலம், அம்ரோஹா மாநிலத்தில் அண்மையில் நடந்திருக்கிறது. 100-க்கு அழைத்திருந்த இளைஞர் ஒருவர் ஏதோ விபரீதம் ஏற்பட்டதுபோல் பேசியுள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, வீட்டிற்குச் செல்ல தன்னிடம் பணம் இல்லை என்றும், அதனால்தான் 100-க்கு அழைப்பு விடுத்ததாகக் கூறியுள்ளார். மேலும், போலீஸ் வாகனத்தில் செல்ல திட்டமிட்டு இருந்ததாகத் தனது நிலைமையை விவரித்துள்ளார்.
அந்த இளைஞர் போதையில் உள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்ததற்கு, புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர எந்தவொரு பழக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் போலீஸ் காரில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, அவரிடம் கேள்வி கேட்ட போலீசார் அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். தற்போது, அந்த வீடியோதான் வலைத்தளங்களில் வைரல் ஹிட்.
Hats off to @Uppolice What all they deal with pic.twitter.com/qBS8qynV6t
— Saurabh Dwivedi (@saurabhtop) March 16, 2019