சத்தான தினை கேசரி ரெசிபி

உடலுக்கு வலுவூட்டும் தினைக் கொண்டு கேசரி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தினை & 200 கிராம்

சர்க்கரை & 200 கிராம்

முந்திரி & 10

உலர்ந்த திராட்சை & 2 டேபிள் ஸ்பூன்

நெய் & ஒன்றரை டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் & சிறிதளவு

செய்முறை:

ஒரு வாணலியில் நெய்விட்டு முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.குக்கரில், ஒரு பங்கு தினைக்கு இரண்டு பங்கு தண்ணீருடன் தினையை சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும்.

ஒரு வாணலியில் நெய்விட்டு சூடானதும், வேக வைத்த தினையை சேர்த்து நன்றாக கிளறவும்.

அத்துடன், கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டபடி கிளறிக் கொண்டே சர்க்கரை சேர்த்து கிளறவும். கெட்டியாக ஆரம்பித்ததும், வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான தினை கேசரி ரெசிபி ரெடி..!

More News >>