மொறு மொறு கீரை பக்கோடா ரெசிபி

கீரையைக் கொண்டு பக்கோடா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கீரை (ஏதாவது) & ஒரு பௌல்

கடலை மாவு & ஒரு கப்

அரிசி மாவு & அரை கப்

இஞ்சி, பச்சை மிளகாய் விழுது & 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் & ஒரு சிட்டிகை

பெருங்காயத்தூள் & ஒரு சிட்டிகை

எண்ணெய் & பொரிப்பதற்கு

உப்பு & தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில், சுத்தம் செய்த கீரை, கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி & பச்சை மிளகாய் விழுது, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.

மாவு தண்ணீயாக இல்லாமலும், மிகவும் கெட்டியாக இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். கலவை தளர்வாக இருந்தால் நல்லது.

வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றவும். அது சூடானதும், மாவு கலவையை கையில் எடுத்து எண்ணெய்யில் தூவினாற்போல் போட்டு பொரிக்கவும்.

பொன்னிறமாக மாறியதும் எடுத்து ஆறவிட்டு பரிமாறவும்.

அவ்ளோதாங்க.. மொறு மொறுப்பான கீரை பக்கோடா ரெடி..!

More News >>