அனைத்து புதுப்படங்களும் இணையத்தில் வெளியானது எப்படி? பேரதிர்ச்சியில் திரைத்துறை
கடந்த வாரம் வெளியான அனைத்துப் படங்களுமே இணையத்தில் வெளியாகியிருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முதல் நாளில் இருந்தே, பைரஸி பற்றிய பயத்துடனே தயாரிப்பாளர்கள் இருந்தாக வேண்டும். ஏனெனில் படப்பிடிப்பு நேரத்தில், எடிட்டிங் டேபிளில், திரையரங்கில் வெளியிடம் போது என எப்போது, படத்தை திருடுவார்களோ என்றே பயத்துடனே படத்தை தயாரிக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான, புரியாத புதிர் பட இயக்குநரான ரஞ்சித் ஜெயகொடியின் இயக்கத்தில் வெளியான படம் ' இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்”. ஹரிஷ் கல்யாண் ஷில்பா மஞ்சுநாத், பாலசரவணன், மா.கா,பா ஆகியோர் நடித்திருந்த இப்படம் காதலை மையப்படுத்தி வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது. இப்படம் மட்டுமின்றி, கடந்த வாரம் வெளியான அதர்வா, மேகா ஆகாஷ் நடிப்பில் ரிலீஸான ‘பூமராங்’ படமும், ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் ஆகியோரது நடிப்பில் வெளியான ஜுலைக்காற்றில் படமும், நெடுநெல்வாடை, அகவன் உள்ளிட்ட படங்களும் இணையத்தில் வெளியானது. படம் வெளியான அன்றே இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்கவும், கட்டுப்படுத்தவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருந்தாலும் புல்லுருவி போல முளைத்துவிடுவதால் தடுக்கமுடியாமல் தவிக்கிறது அரசும், திரைத்துறையும்.