ஓபிஎஸ் தன் மகனை வேட்பாளராக அறிவித்ததில் என்ன தவறு -கடுகடுத்த அமைச்சர்

ஓபிஎஸ் தனது மகனை வேட்பாளராக அறிவித்ததில் தவறு ஒன்றும் இல்லை என அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.     தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பணிகள்  முழுவீச்சில் தொடங்கிவிட்டன. திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட காட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின்  வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.    அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானதுடன் அரசியல் ஆலோசகர்கள் இடையில் விவாதம் எழுந்து. துணை முதல்வர் ஓபிஎஸ் தேனி தொகுதியில் தனது மகன் ரவீந்திரநாத்தை களம் இறக்கியுள்ளார். இதனால், திமுகவைப் போன்று அதிமுகவிலும் வாரிசு அரசியல் தூக்கியுள்ளதே விவாதத்திற்கான காரணம்.இது குறித்து அமைச்சர் கே.சி வீரமணி, 'அதிமுகவிற்காக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பல ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்துள்ளார். ஆகையால், அவரை ஓபிஎஸ், தேர்தலில் வேட்பாளராக அறிவித்ததில் என்ன  தவறிருக்கிறது' எனக் கருத்து தெரிவித்துள்ளார். 
More News >>